< Back
மாநில செய்திகள்
குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
25 May 2022 2:57 PM GMT

கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள குழந்தைகள் நல மையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், நலமான குழந்தைகள் வளமான தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர் தெய்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சி தலைவர் பரிதாநவாப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி, குழந்தைகளுக்கு சத்து மாவு உருண்டையை வழங்கி பேசினார். இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுசித்ரா, ஊரக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் இனியார் மண்டோதரி, டாக்டர்கள் வெங்கடேஷ், ரேகா ஆகியோர் பங்கேற்று, குழந்தைகளை பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுனில்குமார், முகமது ஆசிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்