< Back
மாநில செய்திகள்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
சேலம்
மாநில செய்திகள்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
2 Oct 2023 2:02 AM IST

சேலம் மணியனூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சேலம்

சேலம் மாநகராட்சி 50-வது வார்டு மணியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி முன்னிலை வகித்தனர். மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும் போது, 'முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகரில் 32 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மேயர் வழங்கினார்.

மேலும் செய்திகள்