< Back
மாநில செய்திகள்
மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
24 Aug 2023 2:20 AM IST

சுரண்டையில் மருத்துவ முகாம் நடந்தது.

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள், ஆனைகுளம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் ஆலோசனையின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, சிகிச்சை அளித்தனர்.

மேலும் செய்திகள்