< Back
மாநில செய்திகள்
வெற்றி பெற்ற 1,920 பேருக்கு பதக்கங்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

வெற்றி பெற்ற 1,920 பேருக்கு பதக்கங்கள்

தினத்தந்தி
|
24 Jun 2023 12:17 AM IST

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,920 பேருக்கு பதக்கங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழங்கினர்.


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,920 பேருக்கு பதக்கங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழங்கினர்.

அரசு விழா

விருதுநகர் மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர். மாவட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,920 பேருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 2 ஆயிரமும், 3-வது பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

முதன்மை மாநிலம்

விழாவில் அமைச்சர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்துடன் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி அவர்கள் விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறார். விளையாட்டுத்துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

சிறந்த மாவட்டம்

மாநில அளவில் போட்டிகளில் கலந்து கொள்ள 593 பேர் தகுதி பெற்றுள்ளனர். தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் விளையாட்டு துறையில் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது. இன்னும் சிறப்பாக மாற்ற மாணவ-மாணவிகள் பெருமை சேர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழாவில் எம்.பி.க்கள் நவாஸ் கனி, தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகராட்சி தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்