< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலியானார்.

ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒர்க்ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். முருகன் நேற்று முன்தினம் வேலைக்காக வந்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வல்கனைசிங் வேலைக்காக கடைக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் எதிர்பாராதவிதமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்