< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கடன் தொல்லையால் இறைச்சி கடைக்காரர் தற்கொலை
|26 Jun 2022 7:24 AM IST
சென்னை ராயப்பேட்டையில் கடன் தொல்லையால் இறைச்சி கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டை ஆர்.ஓ.பி. மெயின் ரோடு பீட்டர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சாகீர் உசேன் (வயது 28). இவர், தனது தந்தை நடத்தி வந்த இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் புதிய கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் வாங்கியதாகவும், அதை திரும்ப செலுத்த முடியாமல் கடன்தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சாகீர் உசேன் நேற்று காலை வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.