< Back
மாநில செய்திகள்
அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை

தினத்தந்தி
|
24 Jun 2023 1:23 AM IST

அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டத்தில் அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஆய்வு கூட்டம்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக் குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் சுகாதாரப்பணிகள், குடிநீர் வசதிகள் குறித்து ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது:-

அடிப்படை வசதிகள்

கும்பகோணத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பழுதான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றிவிட்டு புதிய தொட்டிகளை அமைத்து தர வேண்டும். பள்ளி கழிவறைகளை தரமான கழிவறைகளாக மாற்றி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதிலம் அடைந்த மற்றும் பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டிடங்களை உடனே அகற்ற வேண்டும்.

தரமான குடிநீர்

மத்திய அரசின் ஜல் -ஜீவன் திட்டத்தில் அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராம ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஒப்பந்தக்காரர்கள் ஊராட்சி தலைவரிடம் கலந்தாலோசனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளின் புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிக்கான கட்டுமானங்களை தரமாக, விரைவாக கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். முடிவில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்