< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கேபிள் டி.வி. சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஆலோசனை
|6 Feb 2024 10:05 PM IST
கேபிள் டி.வி. சேவை தடையின்றி வழங்குவது குறித்தும், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை,
சென்னை அண்ணா சாலையில் உள்ள செங்கல்வராயன் நாயக்கர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர், அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்கம், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையினர் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையில் இந்த கூட்டத்தில் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜான் லூயிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கேபிள் டி.வி. சேவையை தடையின்றி வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.