கனமழையை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - மேயர் பிரியா தகவல்
|சென்னையில் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை வால்டாக் சாலையில் இருக்கும் குடியிருப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மழைநீர் தேங்கக் கூடிய இடங்கள் கண்டறிந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, அரசாணை 115 குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எதிர்கட்சிகள் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்குடன் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இவ்வாறு வதந்திகளை பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.