விருதுநகர்
விஜயகரிசல்குளம் அகழாய்வில் அளவீடு செய்யும் பணி
|விஜயகரிசல்குளம் அகழாய்வில் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் படம் எடுத்தல், வரைபடம் வரைதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமாக சுவர் பகுதி போன்று காணப்படும் பகுதியை அளவீடு செய்து நீளம், அகலம், குறித்து ஆவணப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பானை ஓடுகள் சுத்தம் செய்யப்பட்டு கருப்பு மற்றும் சிவப்பு என நிறம் வாரியாகவும், தரம் வாரியாகவும் பிரிக்கப்படும் பணி தொடங்குவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் தற்போது குழிகளில் குறைவான பொருட்களே கிடைத்து வருகின்றன. இதுவரை சில்லுவட்டுகள் மற்றும் உடைந்த சங்கு வளையல்களை தவிர்த்து 4,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலாம் கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள் கிடைத்தன. ஆனால் இரண்டாம் கட்ட அகழாய்வில் கூடுதலாக 1,400-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.