< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் அளவீடு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் அளவீடு

தினத்தந்தி
|
25 Dec 2022 12:23 AM IST

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம் அளவீடு செய்யப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, தேரடி அருகே உள்ள 32 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக புகார் ெதரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தன் உத்தரவின்படி தனி தாசில்தார் பிரகாசம் தலைமையில் நில அளவையர்களை கொண்டு அந்த நிலம் அளவீடு செய்யப்பட்டது. அப்போது கோவில் நிர்வாகம் அனுமதியின்றி அந்த நிலத்தை 26 பேர் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது குறித்து அறிக்கை தயார் செய்து உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டு, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனி தாசில்தார் பிரகாசம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்