< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய அளவீடு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய அளவீடு

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

கொள்ளிடம் புதுத்தெரு சாலை முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யப்பட்டது

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த புதுத்தெரு சாலை கொள்ளிடம் கடைவீதியில் இருந்து குத்தவக்கரை கிராமத்துக்கு செல்கிறது. சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் கடைவீதியிலிருந்து பிரிந்து செல்லும் 800 மீட்டர் தூர புதுத்தெரு சாலை பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. 7.5 மீட்டர் அகலத்திற்கு இந்த சாலை அமைக்க வேண்டும்.ஆனால் தற்போதுள்ள சாலை ஐந்து மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. எனவே 7.5 மீட்டர் அகலத்திற்கு சாலையை விரிவு படுத்துவதற்கு நேற்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து நில அளவையர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊராட்சி ஊழியர்கள் நேரில் வந்து அளவீடு செய்ததில் 5 மீட்டர் அகலம் மட்டுமே இருப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து சாலையை சில தினங்களில் விரிவாக்கம் செய்ய இருப்பதால் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை அவர்களாகவே முன்வந்து அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட ஒரு சில தினங்களில் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்