< Back
மாநில செய்திகள்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தினத்தந்தி
|
3 March 2023 1:51 AM IST

அருள்மொழி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கோடைகாலங்களில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்குவது வழக்கம். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் ஒன்றியம் காரைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அருள்மொழி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை மருத்துவ குழுவினர் 275 பசுக்களுக்கும், 25 எருமைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்தினர். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்