< Back
மாநில செய்திகள்
அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சாவு

தினத்தந்தி
|
18 Oct 2023 11:38 PM IST

அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டை மேலமுத்துராஜா தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சஞ்சய் (வயது 7). மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பெற்றோர் வீட்டில் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சஞ்சய்க்கு அம்மை நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்