< Back
மாநில செய்திகள்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
திருச்சி
மாநில செய்திகள்

ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
27 Jun 2023 12:45 AM IST

ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

லால்குடியில் ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னரை மாற்ற கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருச்சி தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். இதில் திருச்சி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.டி.சி. சேரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொக்கையா, வெல்லமண்டி சோமு, லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். லால்குடி ம.தி.மு.க. பொறுப்பாளர்கள் மைக்கேல்ராஜ், பாஸ்கர், சசிக்குமார், துரையரசன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு. வி.சி.க. உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் லால்குடி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்