< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
|25 Jun 2023 5:44 PM IST
காவேரிப்பாக்கத்தில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பச்சையப்பன், நகர தி.மு.க. செயலாளர் பாஸ் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் உதயகுமார் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கையெழுத்து வாங்கி இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.