< Back
மாநில செய்திகள்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
24 Jun 2023 11:17 PM IST

வாணியம்பாடியில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. சார்பில் அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஏ.நாசீர்கான் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், திராவிட கழகம், கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்