திருப்பத்தூர்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
|கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, ஜனாதிபதி திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பும் போராட்டம் திருப்பத்தூர் நகர பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வ.கண்ணதாசன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் அ.நாசீர்கான், மாவட்ட அவைத் தலைவர் எம்.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. கவுன்சிலர் டி.கே.சரவணன் வரவேற்றார்.
தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் பாரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜாபர் சாதிக், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் டி.ரகுநாத், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ம.தி.மு.க. பொருளாளர் சி.மகேந்திரன், தலைமை செயற்குழு எம்.கே.காளிலிங்கன், உள்பட பலர் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் பி.அருணகிரி, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர்கள் குண.இமயவர்மன் நன்றி கூறினார்.