வேலூர்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
|குடியாத்தத்தில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் நகர ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்றக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. குடியாத்தம் நகரத்தில் உள்ள 36 வார்டுகளிலும் கவர்னரை மாற்ற கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் தொடக்க நிகழ்ச்சி குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
குடியாத்தம் நகர செயலாளர் ஆட்டோமோகன் தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் பம்பரம்கிருபாகரன், நகர அவைத்தலைவர் மூகாம்பிகைசம்பத், மாவட்ட பொருளாளர் எம்.டி.சிவகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஏ.கவுதமன் கலந்து கொண்டார்.
கையெழுத்து இயக்கத்தை குடியாத்தம் நகர தி.மு.க. துணை செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான ம.மனோஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.