< Back
மாநில செய்திகள்
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
தென்காசி
மாநில செய்திகள்

ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

தென்காசியில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடந்தது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி ம.தி.மு.க. சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி சுவாமி சன்னதி பஜாரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராம.உதயசூரியன் முன்னிலை வகித்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு, முதல் கையெழுத்திட்டு, தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன், தென்காசி நகர தி.மு.க. செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சாதிர், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ரவிசங்கர், அழகுசுந்தரம், திவான்ஒலி, சார்பு அணி அமைப்பாளர்கள் ஷமீம் இப்ராகிம், கோமதிநாயகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க, ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்