< Back
மாநில செய்திகள்
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
தென்காசி
மாநில செய்திகள்

ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
25 Jun 2023 12:30 AM IST

சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க. சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் வி.எஸ்.சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. நகர செயலாளர் ரத்தினவேல் குமார் வரவேற்றார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முதல் கையெழுத்திட்டு, தொடங்கி வைத்தார்.

இதில் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், தொகுதி செயலாளர் பீர் மைதீன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினார்கள். மேலநீலிதநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசி முருகன், ராஜகுரு, குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பொன் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்