பெரம்பலூர்
ம.தி.மு.க. நகர, ஒன்றிய செயலாளர்கள் தேர்வு
|ம.தி.மு.க. நகர, ஒன்றிய செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோரின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.வில் நகர, ஒன்றிய செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான 5-வது அமைப்பு தேர்தல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்தல் நடந்தது. இதில் பெரம்பலூர் நகர செயலாளராக வக்கீல் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்களாக கோனேரிப்பாளையம் கோ.ப.சி.அறிவழகன் (பெரம்பலூர் வடக்கு), செல்லியம்பாளையம் ஜெயக்குமார் (பெரம்பலூர் தெற்கு), பள்ளகாளிங்கராய நல்லூர் எல்.ஐ.சி. ரெங்கராஜ் (வேப்பூர் வடக்கு), வெண்மணி மணி என்ற ராமநாதன் (வேப்பூர் தெற்கு), எஸ்.ஆறுமுகம் (வேப்பந்தட்டை கிழக்கு), எம்.கே.எஸ்.விஜயராகவன் (வேப்பந்தட்டை மேற்கு), குரூர் முக்கூடல் ராஜ்மோகன் (ஆலத்தூர் மேற்கு), கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர் கிழக்கு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.