ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் - ராமதாஸ்
|ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று முன்தினம் இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. வைகோ விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.