< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ம.தி.மு.க. கொடியேற்று விழா
|24 May 2022 1:13 AM IST
மானாமதுரையில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
மானாமதுரை,
மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதியில் ம.தி.மு.க. ஒன்றிய, நகர் கழக சார்பில் கட்சியின் 29-வது ெதாடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா, தெருமுனை பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நகர செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் அசோக், நகர் இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் வரவேற்று பேசினார்.
நகராட்சி அலுவலகம் அருகே நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் தலைமை கழக.பேச்சாளர் பாண்டுரங்கன் சிறப்புரை ஆற்றினார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, நகர் பொருளார் பாண்டியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.