< Back
மாநில செய்திகள்
ம.தி.மு.க. செயற்குழு கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ம.தி.மு.க. செயற்குழு கூட்டம்

தினத்தந்தி
|
11 Oct 2022 12:15 AM IST

திண்டுக்கல்லில் மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

ம.தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராகவன், பொருளாளர் சுதர்சன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வருகிற 15-ந்தேதி திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள தியேட்டரில் 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.


இதற்கான விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும், விழா ஏற்பாடுகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, முனியாண்டி, நகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மோகன், 48-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக வைகோ ஆவண படத்துக்கான டிக்கெட்டுகளை, மாவட்ட செயலாளர் செல்வராகவன் நிர்வாகிகளிடம் வழங்கினார்.




மேலும் செய்திகள்