< Back
மாநில செய்திகள்
ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடியேற்றம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடியேற்றம்

தினத்தந்தி
|
7 May 2023 12:37 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடியேற்றப்பட்டது.

ம.தி.மு.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தலைமை செயலாளர் துரை வைகோ ஆகியோர் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஜெயசீலன் தலைமையில், கட்சியினர் வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் நெற்குணம், சித்தளி, ஒதியம், மேலமாத்தூர், மருதையான் கோவில், வெண்மணி, கொளப்பாடி, நல்லறிக்கை, வேட்டக்குடி, துங்கபுரம், லெப்பைக்குடிகாடு, திட்டக்குடி பார்டர், திருமாந்துறை, வயலப்பாடி ஆகிய பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் கட்சியின் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், ரெங்கராஜ், மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் மணி, ரெங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்