< Back
மாநில செய்திகள்
10-வது மாடியில் இருந்து குதித்து எம்.பி.பி.எஸ் மாணவி தற்கொலை: கடிதம் சிக்கியது - சென்னையில் பரபரப்பு
மாநில செய்திகள்

10-வது மாடியில் இருந்து குதித்து எம்.பி.பி.எஸ் மாணவி தற்கொலை: கடிதம் சிக்கியது - சென்னையில் பரபரப்பு

தினத்தந்தி
|
15 Feb 2023 8:48 PM IST

சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் அருகே அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ. இவர் கேகே நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், தான் வசித்து வந்த வீட்டின் 10-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து நித்யா ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், அடுத்த மாதம் யூரோப் செல்ல பெற்றோர் திட்டமிட்டுள்ள நிலையில், மகிழ்ச்சியாக சென்று வாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்