< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
|22 Sept 2022 7:04 AM IST
விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும்
சென்னை,
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம்
2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள இணையதள விண்ணப்ப பதிவு 22-ந் தேதி இன்று முதல் தொடங்குகிறது.
விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும். மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்