< Back
மாநில செய்திகள்
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மேயர் ஆய்வு
விருதுநகர்
மாநில செய்திகள்

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மேயர் ஆய்வு

தினத்தந்தி
|
12 Oct 2023 2:19 AM IST

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மேயர் சங்கீதா இன்பம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா? என்றும் கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா? என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பிரசவ வார்டு மற்றும் பொது வார்டுகளை ஆய்வு மேற்கொண்டார். திடக்கழிவு மேலாண்மை சம்பந்தமாகவும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், அரசு தலைமை டாக்டர் அய்யனார், மாநகராட்சி சுகாதார அலுவலர் திருப்பதி, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் சுகாதார அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்