< Back
மாநில செய்திகள்
தாம்பரம் மாநகராட்சியில் மேயர் தேசிய கொடி ஏற்றினார்
சென்னை
மாநில செய்திகள்

தாம்பரம் மாநகராட்சியில் மேயர் தேசிய கொடி ஏற்றினார்

தினத்தந்தி
|
16 Aug 2022 8:43 AM IST

தாம்பரம் மாநகராட்சியில் மேயர் வசந்தகுமாரி தேசிய கொடி ஏற்றினார்.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் டாக்டர் இளங்கோவன் முன்னிலையில் மேயர் வசந்தகுமாரி தேசிய கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.

அதேபோல பெருங்களத்தூர் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, கிழக்கு தாம்பரம் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் எஸ்.இந்திரன், செம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் ஜெய பிரதீப் சந்திரன், பம்மல் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் வே.கருணாநிதி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.

இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள், செயற்பொறியாளர் முருகேசன், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்