< Back
மாநில செய்திகள்
தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர்வடிகால்வாய் பணிகளை மேயர் ஆய்வு
சென்னை
மாநில செய்திகள்

தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர்வடிகால்வாய் பணிகளை மேயர் ஆய்வு

தினத்தந்தி
|
8 July 2023 3:25 PM IST

தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர்வடிகால்வாய் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றியும், போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மண்டலம் 3, வார்டு 44-க்குட்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் தெரு முதல் விநாயகர் தெரு, பாண்டியன் தெரு, பவானி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.3.29 கோடி மதிப்பீட்டில் 0.640 கிலோமீட்டர் நீளத்திற்கும், மண்டலம் 5, மாடம்பாக்கம், வார்டு 67-க்குட்பட்ட பிருந்தாவன் நகர் பிரதான சாலையிலிருந்து வேங்கைவாசல் ஏரிவரை ரூபாய் 7.02 கோடி மதிப்பீட்டில் 2.145 கிலோமீட்டர் நீளத்திற்கும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனை நேற்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தலைமையில், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்