< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் கடல் சீற்றம்.. 3 அடி வரை எழும் ராட்சத அலைகள்
மாநில செய்திகள்

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் கடல் சீற்றம்.. 3 அடி வரை எழும் ராட்சத அலைகள்

தினத்தந்தி
|
12 Nov 2022 9:37 AM IST

இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் டேனிஷ் கோட்டையை மழைநீர் சூழ்ந்தது.

மயிலாடுதுறை,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 43 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் டேனிஷ் கோட்டையை மழைநீர் சூழ்ந்தது. இதுவரை இப்படியொரு மழையை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இடுப்பளவுக்கு மேல் தேங்கியுள்ள மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதனிடையே தரங்கம்பாடியில் கடல் சீற்றத்துடன் கானப்படுகிறது. கடல் அலைகள் 3 அடி வரை எழுகிறது. கடல் சீற்றத்தை தொடர்ந்து, மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர்.

மேலும், கடலோர காவல் போலீசார், மீனவர்களை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்