< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பிரம்மாண்ட உருளை கரை ஒதுங்கியதால் பரபரப்பு
|10 Jan 2023 7:16 PM IST
கரை ஒதுங்கிய பிரம்மாண்ட உருளை குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்த்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கடற்கரையில் பிரம்மாண்ட உருளை போன்ற பொருள் கரை ஒதுங்கியது. இது குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை செய்ததில், அந்த உருளை சென்னையைச் சேர்ந்த தனியார் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக அந்த உருளை நிலை தடுமாறி மயிலாடுதுறை அருகே கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.