தஞ்சாவூர்
மாயம்பெருமாள் கோவில் மதலை எடுப்பு விழா
|திருச்சிற்றம்பலம் அருகே ஏனாதிக்கரம்பை கிராமத்தில் அமைந்துள்ள மாயம் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு வீரராகவபுரம் கிராமத்தார்கள் நேற்று மதலை எடுப்பு விழா நடத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் அருகே ஏனாதிக்கரம்பை கிராமத்தில் அமைந்துள்ள மாயம் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு வீரராகவபுரம் கிராமத்தார்கள் நேற்று மதலை எடுப்பு விழா நடத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
மாயம் பெருமாள் கோவில்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஏனாதிகரம்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாயம் பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டுவீரராகவபுரம், ஏனாதிகரம்பை, பஞ்சநதிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாணாகரை கிராமத்தில் இருந்து மதலைகளை மாயம்பெருமாள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மாவிளக்கு பூஜை
அதனைத் தொடர்ந்து, பொங்கல் விழாவும் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாயம் பெருமாளை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர், ஏனாதிக்கரம்பை, வீரராகவபுரம், அம்மையாண்டி, பஞ்சநதிபுரம் கிராமத்தார்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.