< Back
மாநில செய்திகள்

அரியலூர்
மாநில செய்திகள்
5 குழந்தைகளின் தந்தை மாயம்

7 Sept 2023 12:00 AM IST
5 குழந்தைகளின் தந்தை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தொட்டிக்குளம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உஷா (வயது 43). இவரது கணவர் அருள். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் அருளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த அருள் திடீரென மாயமானார். இதுகுறித்து உஷா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருளை வலைவீசி தேடி வருகிறார்கள்.