< Back
மாநில செய்திகள்
புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும் - எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

தினத்தந்தி
|
31 Dec 2022 11:36 AM IST

இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும் என்று எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மலருகின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும்; அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று, எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சிறப்புடன் வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமையுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

புலரும் புத்தாண்டு, அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்; இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும்; நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றையெல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்