< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும்...இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் - ஓ.பன்னீர் செல்வம் பொங்கல் வாழ்த்து...!
|14 Jan 2023 10:44 AM IST
இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும்...இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப, இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும், இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் என நெஞ்சார வாழ்த்தி, தமிழக மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக வாழ எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.