"விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும்" -அண்ணாமலை வாழ்த்து
|விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"முழுமுதற் கடவுள், மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும் தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய எம்பெருமான் விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் மகா கணபதியே போற்றி!" இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.