< Back
மாநில செய்திகள்
கலெக்டரை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டிடம் மாதர் சங்கம் மனு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கலெக்டரை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை-போலீஸ் சூப்பிரண்டிடம் மாதர் சங்கம் மனு

தினத்தந்தி
|
11 Jun 2023 12:28 AM IST

கலெக்டரை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலக வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு சிலை அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாதர் சங்கத்தினர் சார்பில் போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை விவகாரம் தொடர்பாக சிலர் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் கலெக்டர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். நடக்காக ஒரு சம்பவத்தை நடந்ததாக தொடர்ந்து வதந்தியை பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர். மேலும், சங்கத்தின் சார்பில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாவட்ட செயலாளர் சுசிலா, தலைவர் பாண்டிச்செல்வி, துணை தலைவர் சலோமி ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்