மாதா பேராலய திருவிழா: வேளாங்கண்ணி-மும்பை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
|சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது.
தஞ்சாவூர்,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து வருகிற 26-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01161) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.
இதேபோல், மும்பையில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01164) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.