< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
ஈரோடு அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

20 Aug 2024 10:44 PM IST
டி.என்.பாளையத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். டி.என்.பாளையத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.