< Back
மாநில செய்திகள்
பல்லடம் அருகே 4 பேர் படுகொலை: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம் நீடிப்பு
மாநில செய்திகள்

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம் நீடிப்பு

தினத்தந்தி
|
4 Sep 2023 12:14 PM GMT

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர்,

பல்லடம் அருகே 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவு பெற்றது. முதலில் அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பாஜகவினர் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போலீசாரும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மறியலால் பல்லடம் அரசு மருத்துவமனை பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்