< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
|25 Oct 2023 12:15 AM IST
கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் சோபனம் (வயது 61). கொத்தனார். இவருடைய மனைவி ராஜலட்சுமி (52). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சோபனம் உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் அவரின் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரின் மனைவி ராஜலெட்சுமி அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு சோபனம் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.