< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
குளத்தில் மீன்பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் பலி
|21 July 2022 11:06 PM IST
குளத்தில் மீன்பிடித்தபோது தண்ணீரில் மூழ்கி கொத்தனார் பலியானார்.
லாலாபேட்டை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 43). கொத்தனார். இவர், சம்பவத்தன்று தொட்டியப்பட்டி குளத்தில் இறங்கி மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவசுப்பிரமணியன் தண்ணீர் மூழ்கியதால் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் குளத்தில் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவசுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவசுப்பிரமணியன் மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.