விருதுநகர்
காரியாபட்டி அருகே விபத்தில் கொத்தனார் பலி
|காரியாபட்டி அருகே விபத்தில் கொத்தனார் பலியானார்.
காரியாபட்டி பேரூராட்சி, என்.ஜி.ஓ.நகர் மல்லிகை தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). கொத்தனார். இவர் திருச்சுழி சென்று வேலைக்கு ஆட்களை வருமாறு அழைத்து விட்டு மீண்டும் காரியாபட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் தோப்பூர், நான்குகால் மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தார். தோப்பூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (25) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள், சிவக்குமார் மோட்டார்சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சிவக்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் வினோத்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்தில் பலியான சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.