< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

தினத்தந்தி
|
20 July 2022 2:17 AM IST

திருவட்டார் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

திருவட்டார்,

திருவட்டார் அருகே செறுகோல் கடமனாங்குழிவிளையை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது50), கொத்தனார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. சுகுமாறன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் இருந்த சுகுமாறன் அலறினார். குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, விஷம் குடித்ததாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சுகுமாறன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்