< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்.!
|1 April 2023 6:53 AM IST
இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
சென்னை,
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது; நாளை (இன்று) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடுகிறது" என்றார்.