சேலம்
மாசி மக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
|மேச்சேரி:-
மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி மக தேர்த்திருவிழா பத்ரகாளியம்மன் கோவிலின் தாய்வீடான பொங்கபாலியில் இருந்து சக்தி அழைத்தல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. தேரோட்டம் கோவிலில் இருந்து தொடங்கி விநாயகர் தேர், சின்ன தேர், கிழக்கு கோபுரம், சந்தைப்பேட்டை, கிராம சாவடி, மேற்கு கோபுரம் வழியாக சென்று கோவிலை வந்தடைகிறது.
நாளை (திங்கட்கிழமை) விநாயகர் தேரும், பெரிய தேரும் கோவிலில் இருந்து புறப்பட்டு மேற்கு ரத வீதி கிராம சாவடி அருகே நிறுத்தப்படுகிறது. பின்பு அங்கிருந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கூட்டத்தாருடன் விநாயகர் தேர், பெரிய தேர் கோவிலை அடைதலும் நடக்கிறது. 8-ந் தேதி இரவு சத்தாபரணம், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் பொங்க பாலியிலிருந்து வாணவேடிக்கையுடன் திருவீதி உலாவும், 10-ந் தேதி மஞ்சள் நீராடுதலும் நடைபெறுகிறது.