< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்... அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்... அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

தினத்தந்தி
|
6 March 2023 8:51 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் செய்திகள்