< Back
மாநில செய்திகள்
கோலியனூரில்    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கோலியனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

கோலியனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலியனூர்,

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோலியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பாதுகாப்பிற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், 24 மணி நேர சிகிச்சையை மேம்படுத்த வேண்டும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குடியிருப்பு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, வட்ட செயலாளர் கண்ணப்பன், நகர செயலாளர் மேகநாதன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி அம்பிகாபதி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் வட்டக்குழு நிர்வாகிகள் மதுசுதனன், சம்சுதீன், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்